நோர்டிஸ்க் பிலிம் ஆதரவுக்கரத்தில் உயிர்வரை இனித்தாய்


அப்ரோடெஜி வழங்கும் உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் வெளியீட்டு விழா எதிர்வரும் 22 ம் திகதி நடைபெறவுள்ளது.
கேர்னிங்கில் உள்ள நோடிஸ்க் திரையரங்கில் உயிர்வரை இனித்தாயின் டேனிஸ் விளம்பரம் வெளியாகியிருக்கும் புகைப்படத்தையே இந்தக் காட்சியில் காண்கிறோம்.
இந்தத் திரைப்படம் டேனிஸ் ரெக்ஸ் போடப்பட்டு திரையிடப்பட இருப்பதால் அன்றைய தினம் நகர மக்களை வரும்படி நோடிஸ்க் திரைப்பட நிறுவனம் சிறப்பு அழைப்பும் விடுத்துள்ளது.
உலக சினிமா வரலாற்றில் நூறு ஆண்டுகால வரலாறு படைத்துள்ள நோடிஸ்க் பிலிம் இந்தியாவிற்கு வெளியே தயாரான ஒரு தமிழ்த் திரைப்படத்தை தனது பணிகளில் தானே முன்னெடுத்திருப்பது சாதனையாகும்.
இந்தப்படத்தை பார்வையிட்ட நோடிஸ்க் நிறுவன முக்கிய பணியாளர் அற்புதமாக வந்துள்ளது என்று பாராட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது தமிழர் என்றாலும் பர்தா அணிந்த முஸ்லீம்கள் என்றாலும் கலாச்சாரத்தில் ஒன்றுதான் என்றே கருதியிருந்தேன், ஆனால் தமிழர் மிகவும் வித்தியாசமானவர்கள், சிறந்த முறையில் இணைவாக்கம் அடைந்துள்ளார்கள் என்பதற்கு இதுவே சிறந்த ஆவணம்.
தமிழ் மக்களின் இணைவாக்கமும், அவர்களுடன் டேனிஸ் மக்களும், யுவதிகளும் இணைந்து நடித்திருப்பதும் தமக்கு பலத்த ஆச்சரியத்தை தருவதாகவும் கூறினார்.
வெளிநாட்டவர் பற்றி தப்பான உலகத்தில் வாழ்வோரின் இரும்புச் சுவர்களை இந்தப்படம் இடித்துத் தகர்க்கும் என்ற அவர் டேனிஸ் மக்கள் பெருமளவில் பார்வையிட நோர்டிஸ்க் திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆவன செய்துள்ளதென்றார்.
டேனிஸ் மக்களுக்காக டேனிஸ் சப்டைட்டிலுடன் தனியான அரங்கில் காண்பிக்கப்படவுள்ளது இன்னொரு சிறப்பம்சமாகும்.
திரையரங்க வாசலில் கட்டவுட் ஏற இருப்பது இன்னொரு சிறப்பம்சமாகும்.
இதற்குள் உயிர்வரை இனித்தாய் முதலாவது அரங்கு நிறைந்துவிட்டது, இரண்டாவது அரங்கும் வேகமாக நிறைந்து கொண்டிருக்கிறது, உடனடியாக பதிவுகளை செய்யுங்கள் என்று ரசிகர்கள் அன்பாகக் கேட்கப்பட்டுள்ளனர்.
அலைகள் 03.03.2014 திங்கள் மாலை